ஆசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்..! பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு.!

Senthil Velan

புதன், 29 மே 2024 (22:12 IST)
மதுரை அருகே ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர்,  தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியில் பணியாற்றும் 3 பெண் ஆசிரியைகளுக்கு பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. 
 
இவர்கள் 7 பேர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கபட்ட 3 பெண் ஆசிரியைகளின் மொபைல் போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது போனில் இருந்து தனிப்பட்ட தகவல்களையும் எடுத்துகொண்டதாகவும், இதனைக் காரணமாக வைத்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி..! குற்றாலத்தில் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தும்.!
 
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஏழு பேர் மீது பாலியல் துன்புறுத்தல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்