முதலில் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், அப்புறம் மத்திய அரசை குறை கூறலாம்: எல்.முருகன்

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:59 IST)
முதலில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் அதற்கு அப்புறம் மத்திய அரசை குறை கூறலாம் என தமிழக பாஜக தலைவர் எல்முருகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னையில் ஒரு லட்சம் முகக் கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் சுகாதாரத் துறைக்கு இன்று தமிழக பாஜக தலைவர் எல்முருகன் வழங்கினார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது திமுக முதலில் தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு அதன் பிறகு மத்திய அரசை குறை கூறலாம் என்று கூறினார்
 
தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுப்பதாக கூறியது என்ன ஆச்சு என்றும் அதனை உடனே கொடுக்க வேண்டும் என்றும் எல்முருகன் வலியுறுத்தினார். நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று திமுகவுக்கு தெரியும் என்றும் ஆனாலும் மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் முயற்சிப்பதாகவும் குற்றம் கூறிய எல் முருகன் சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் கல்வித் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்றும் மாணவர்களை அரசியலில் ஈடுபட செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்