அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

புதன், 9 ஜூன் 2021 (12:53 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் தற்போது உட்கார்ந்து இருக்கிறது. இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 
 
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 14-ஆம் தேதி 12 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காவல்துறையினர்களிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி கொடுப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே போஸ்டர் போர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்