அதிமுக, திமுக துணை இல்லாமல் ஒரு தேர்தலையாவது திருமாவளவன் சந்தித்தது உண்டா? குஷ்பு

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (12:33 IST)
தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரைச் சொல்லி தான் பாஜக வாக்கு கேட்பதாக திருமாவளவன் கூறிய நிலையில் அதிமுக, திமுக துணை இல்லாமல் ஒரு தேர்தலையாவது  திருமாவளவன் இதுவரை சந்தித்தது உண்டா என்று நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்

மற்றவர்களின் தயவில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சவாரி செய்து கொண்டிருக்கிறது என்றும் ஆனால் பாஜக யாரையும் நம்பி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் சிறிய கட்சி பெரிய கட்சி என்பதெல்லாம் எங்கள் கூட்டணிக்கு முக்கியமில்லை, யார் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறார்களோ அவர்கள் எங்கள் கூட்டணியில் சேரலாம், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் எம்ஜிஆர் ஜெயலலிதா பற்றி பெருமையாக பேசுகிறார், எனவே பாஜக கூட்டணிக்கு அதிமுக உள்பட யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்

பாஜக நிச்சயம் அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்,  நம்பிக்கைதான் எங்கள் பலம், அதனால் எங்கள் வெற்றியை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்

மக்களவைத் தேர்தலில் என்னை போட்டியிட சொன்னால் நான் போட்டியிடுவேன் என்றும் பிரச்சாரம் மட்டும் செய்யச் சொன்னால் பிரச்சாரம் செய்வேன் என்றும் எனக்கு பாஜகவின் வெற்றி தான் முக்கியம் என்னுடைய தனிப்பட்ட வெற்றி முக்கியமல்ல என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்