டுவிட்டரில் குஷ்பு தெரிவித்த கருத்துக்கு பலர் அதை கேலி செய்து கருத்து பதிவிட்டனர். இதில் ஆவேசமடைந்த குஷ்பு அவர்களுடன் மல்லுக்கட்டில் ஈடுப்பட்டார்.
நேற்று குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், தான் மும்பைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கும்பலின் கையில் சிக்கிக் கொண்டதே என கருத்து பதிவிட்டார். இந்த கருத்துக்கு பலரும் அவரை கேலி செய்து கமெண்ட் செய்தனர்.
மேலும், தமிழக சூழல் தனக்கு வருத்தம் அளிப்பதால் இன்று ஸ்மைலி பயன்படுத்த மாட்டேன். இந்த காலை மகிழ்ச்சியான காலையாக இருக்க முடியாது என்று கருத்து பதிவிட்டு இருந்தார்.
இதற்கு அவரை கேலி நீ முதல ஒரு கட்சியில இரு அப்புறம் பேசு என்றும், நீயே சொஞ்ச நாள் முன் மாஃபியா வசம்தான் இருந்த என்றும் பதில் கமெண்ட் செய்துள்ளனர்.
இதில் ஆவேசமடைந்த குஷ்பு பதிலுக்கு அவர் கமெண்ட் செய்துள்ளார். அதில், நியாயம் பேசுறதுக்கு கட்சி தேவை இல்லை. உன்ன மாதிரி ஆளுங்களால்தான் தமிழகத்திலே பிரச்சனை.. ஜால்ரா போடுறத நிறுத்திட்டு கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்க என பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு.