ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரத்தை முடக்க பாஜகவின் பலே திட்டம்?

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (21:46 IST)
தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர் 
 
திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான் என்றும் இவர்களுடைய கூட்டங்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவில் உள்ள இந்த இரண்டு பேர்களின் பிரச்சாரத்தை முடக்குவதற்காக பாஜக திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது 
 
அதன்படி திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை போட்டியிட வைக்கவும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் குஷ்புவை போட்டியிட வைக்கவும் பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் அவ்வாறு அண்ணாமலை மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி எதிர்த்து போட்டியிட்டால் தங்களுடைய தொகுதியிலேயே அவர்கள் முடங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதனால் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்வது தடைப்படும் என்றும் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்