பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

Prasanth K

செவ்வாய், 22 ஜூலை 2025 (14:41 IST)

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை உடனடியாக அவை ஏற்றுக் கொண்டதும் எதிர்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சந்தேகம் எழுப்பி பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் “நேற்று நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஏற்பாடு செய்தார். 12.30 மணிக்கு நடைபெற்ற அந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

 

ஆனால் பின் மதியம் 4.30 மணியளவில் நடைபெற்றக் கூட்டத்தின்போது ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ பங்கேற்கவில்லை, அதுகுறித்து தன்கருக்கு தகவல் தெரிவிக்கவும் இல்லை. இதனால் கோபமான ஜெகதீப் தன்கர் இன்று 1 மணிக்கு கூட்டத்தை ஒத்தி வைத்தார். ஆனால் இன்று தனது ராஜினாமாவை அளித்துள்ளார்.

 

அப்படி பார்த்தால் நேற்று மதியம் 1 மணியிலிருந்து 4 மணிக்குள் ஏதோ நடந்திருக்கிறது. அதனால்தான் மத்திய அமைச்சர்கள் வேண்டுமென்றே கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்துள்ளனர். தற்போது அவர் யாரும் எதிர்பாராத விதமாக உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்திருக்கிறார்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்