தமிழக பாஜக தலைவர் இவரா? பரபரப்பு தகவல்!

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (11:21 IST)
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார்.  இதனை அடுத்து ஒரு சில மாதங்களாக தமிழக பாஜகவின் தலைவர் பதவி காலியாக உள்ளது 
 
தமிழக பாஜகவின் புதிய தலைவராக எச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், சி பி ராதாகிருஷ்ணன், கேடி ராகவன் உள்பட பலர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜனவரி முதல் வாரத்தில் தமிழக பாஜக தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக ராமநாதபுரத்தை சேர்ந்த குப்புராமு அவர்கள் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று கூறப்படுவதால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 1986 முதல் 2006 வரை பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜக துணைத் தலைவராகவும் பின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தவர் குப்புராமு என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்