கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ்கள் திடீர் நிறுத்தம்: பயணிகள் பரபரப்பு

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (12:37 IST)
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு மணி நேரம் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்ல வேண்டிய பேருந்து ஒன்று பயணிகள் நிரம்பிய பின்னரும் எடுக்கப்படாமல் இருந்தது. இது குறித்து பயணிகள் மற்றும் ஓட்டுநருக்கு வாக்குவாதம் வந்த நிலையில் ஓட்டுநர்கள் அனைவரும் திடீரென பேருந்தை ஓட்டாமல் நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்து பயணிகள் கூறும்போது ஒரு பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு எடுக்கவில்லை என்று கூறியதை அடுத்து ஓட்டுநர் கோபப்பட்ட தாகக் கூறினார்
 
ஆனால் ஓட்டுனர் இதுகுறித்து கூறியபோது தங்களுக்கு இரவு நேரத்தில் பேருந்து ஓட்டும் போது ஓய்வு தேவை என்றும் ஓய்வு இல்லாமல் எங்களால் ஓட்ட முடியாது என்றும் அதனால் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு ஓட்டுவதாக கூறினோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்