சானிட்டைசர் பாட்டிலில் தீவைத்து விளையாடிய சிறுவர்கள் – எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (16:26 IST)
காஞ்சிபுரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மேல் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஜெயவேல்-பொற்செல்வி ஆகிய தம்பதிகளின் மகன் பிரகாஷ் என்பவர் தனது நண்பன் முகுந்தனுடன் இணைந்து விளையாடிக் கொண்டுள்ளார். அப்போது அருகில் கிடந்த சானிட்டைசரை எடுத்து கட்டை மேல் ஊற்றி தீவைத்துள்ளனர். அப்போது கட்டையில் வேகமாகப் பற்றிய தீ சிறுவர்களின் உடலிலும் சானிட்டசைர் பற்றி இருந்ததால் அவர்கள் மேலும் பரவியுள்ளது.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், உடனே தீயை அணைத்து சிறுவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக அதிகளவில் சானிட்டைசர்கள் பய்ன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றைக் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்