மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் ஸ்பாட் – 80 வயதில் எனர்ஜியோடு ஆட்டம் போட்ட பாடகி!

ஞாயிறு, 1 நவம்பர் 2020 (16:19 IST)
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி.

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று முடிவடைந்தது.  கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது. இதனால் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு "மூக்குத்தி அம்மன்" படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்தை எல் ஆர் ஈஸ்வரி படக்குழுவினருடன் இணைந்து கலகலப்பாக நடனம் ஆடும் வீடியோவை ஆர் ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார். அதில் ’80 வயதில் இவரின் எனர்ஜியை பாருங்கள் ‘ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்