த்ரிஷாவின் முன்னாள் காதலர் மேல் போலீஸில் புகார்!

ஞாயிறு, 1 நவம்பர் 2020 (16:11 IST)
நடிகர் திரிஷாவின் முன்னாள் காதலரான வருண் மணியன் மேல் பண மோசடி வழக்கில் புகார் செய்யப்ப்ட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான வருண் மணியன் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா ரசிகர்களால் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டார். அதற்குக் காரணம் நடிகை திரிஷாவுக்கும் அவருக்கும் நடந்த நிச்சயதார்த்தமே. விரைவில் திருமணம் ஆக இருந்த நிலையில் நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டார் திரிஷா.

இந்நிலையில் இப்போது வருண் மணியன் மேல் பணம் மோசடி செய்ததாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேடியன்ஸ் ரியாலிட்டி  என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார் வருண் மணியன். அதில் அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இரண்டு பிளாட்களுக்காக முன்பணம் 2 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பிளாட்களை அவருக்குக் கொடுக்காமல் வேறு யாருக்கோ விற்றுள்ளார் வருண். அதையடுத்து வெங்கடேசன் முன் பணத்தைக் கேட்க அதையும் தராமல் இழுத்தடித்துள்ளார். மேலும் பணம் கேட்டவரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து வருண் மணியன் மேல் காவல் நிலையத்தில் பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்