ராகுல்காந்தி-ஸ்மிருதி இரானி பார்முலா: முக ஸ்டாலினுக்கு வேட்பாளரை பிக்ஸ் செய்த பாஜக!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:27 IST)
கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்திக்கு எதிராக ஸ்மிருதி இரானி என்பவரை பாஜக போட்டியிட வைத்து ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் முதல் முறை தோல்வி அடைந்தாலும் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி வீழ்த்தினார் என்பது தெரிந்ததே
 
ஒரு பெரிய கட்சி தலைவரை தோற்கடிக்கும் பார்முலாவை கண்டுபிடித்த பாஜக தற்போது அதே பார்முலாவை தமிழகத்திலும் பயன்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் தற்போதைக்கு பாஜகவுக்கு உள்ளது என்பதும் குறிப்பாக முக ஸ்டாலின் இந்த முறை வெற்றி பெறக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது 
 
எனவே முக ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் குஷ்புவை போட்டியிட வைக்க வைக்கவும் அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலையை நியமனம் செய்யவும் பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
எனவே அண்ணாமலை மற்றும் குஷ்பு ஆகியோர்களின் அதிரடி பிரச்சாரங்கள் காரணமாக முக ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் பெரும் சவாலாக இருக்கும் வகையில் பாஜகவின் வியூகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்