தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக இருக்க மாட்டேன்; குஷ்பு

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (16:49 IST)
கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகை குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திமுகவிலிருந்து வெளியேறினார்
 
அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல்காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் 
 
இந்த நிலையில் திடீரென குஷ்பு பாஜகவில் சேர இருப்பதாக வதந்திகள் பரவியது. அதனை உறுதி செய்தது போல் இன்று காலை அவர் புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
குஷ்பு பாஜகவில் சேரப் போகிறார் என்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிராக கருத்து கூறுகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைமைக்கு புகார் பறந்தது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த குஷ்பு ’தலைமை எது சொன்னாலும் அதை அப்படியே தலையாட்டும் தொண்டனாக தான் இருக்க மாட்டேன் என்றும் புதிய கல்விக் கொள்கை குறித்த திட்டத்தில் ராகுல் காந்தியின் கருத்து மற்றும் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களில் இருந்து தான் வேறுபடுவதாகவும், இந்த புதிய கல்விக் கொள்கை உண்மையிலேயே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்
 
காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியின் கொள்கைக்கு எதிரான கருத்து கூறிய குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்