வேல் வரைஞ்சது ஒரு குத்தமா? ஈபிஎஸ்-ஐ கேள்வி கேட்ட எச் ராஜா!!

வியாழன், 30 ஜூலை 2020 (13:32 IST)
பாஜகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. 
 
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும் இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியது.  
 
இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை இடையர்பாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி இல்லம் முன்பு, அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  
 
பூக்களால் முருகனின் வேல் வரைந்தும், பெண்கள் தங்களது கைகளில் வேலை பல வண்ணங்களால் வரைந்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் முருகன் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் பாடியும், கறுப்பர் கூட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் போராட்டம் நடத்திய காரணத்திற்காக பாஜகவினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் என்கிற பெயரில் சாலைகளில் தேசவிரோத கோஷங்களை எழுதியவர்கள் மீது வழக்கு கிடையாது முருகப்பெருமானின் வேலை வரைந்தால் வழக்கா? இது ஏற்புடையதல்ல. கண்டனத்திற்கு உரியது என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்