சென்னையில் 8 இடங்களில் கேரள மாநில என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - ஒருவர் கைது

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (10:07 IST)
சென்னையில்  எட்டு இடங்களில் கேரள மாநில என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தததை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
கேரள கடற் பகுதியில் 1500 கோடி ரூபாய் போதை மருந்து மற்றும் ஆயுதங்கள் கடத்திய வழக்கில் கேரளா என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் உள்ள எட்டு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டனர் 
 
சென்னை பாரிமுனை உள்பட ஒருசில பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் சோதனை நடத்தியதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் போரூரை சேர்ந்த ஐயப்பன் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த சோதனையில் 300 கிராம் தங்கம் ஒரு கோடி ரூபாய் ரொக்க பணம் மற்றும் கிலோ கணக்கில் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சென்னை சேர்ந்த ஒரு சில நபர்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்