தமிழ்நாட்டில் இருந்து அனைத்து சாலைகளையும் தடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக வதந்திபரவுகிறது. இதுபோன்ற விசயத்தை நாங்களே நினைத்ததில்லை. அவர்கள் நம் அண்டை மாநிலத்தவர் அல்ல.அவர்களை நம் சகோதரசகோதரிகளாகவே பார்க்கிறோம். என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்! @vijayanpinarayi என தெரிவித்துள்ளார்.