சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் திடீர் அனுமதி

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (11:08 IST)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுவொரு வழக்கமான சோதனை தான் என்றும், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சென்னை அப்பல்லோவில் பணிபுரிவதால் அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூறுகின்றனர்.

ஆனால் வழக்கமான சோதனைக்கு அதிகாலை 2 மணிக்கு ஏன் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்