கோட்டையில் எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் சந்திப்பு...

சனி, 3 மார்ச் 2018 (09:04 IST)
காவிரி விவகாரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கோட்டை சந்தித்து பேச உள்ளனர். 
 
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாக அமைந்தது. 
 
இருப்பினும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்த பிரச்சனையில் அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என ஆலோசணை கேட்க ஸ்டாலினை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார் முதல்வர். 
 
அதன் பின்னர் இருவரும் இன்று சந்திப்பதாய் முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னை கோட்டையில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை இருவரும் சந்தித்து பேசவுள்ளனர். 
 
எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் செல்வதாக இருந்தார். ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை நடத்த இருப்பதால், அவர் தனது சேலம் பயணத்தை ரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்