அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத கதிர் ஆனந்த்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (11:43 IST)
அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் நாடாளுமன்ற எம்பி கதிர் ஆனந்த் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் அந்த சம்மனுக்கு கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கதிர் ஆனந்த் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்த நிலையில் கணக்கில் வராத சில லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து இது குறித்து விளக்கம் அளிக்க நவம்பர் 28ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கதிர் ஆனந்த் அவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது

ஆனால் நேற்று கதிர் ஆனந்த ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்