அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்: விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு

வெள்ளி, 24 நவம்பர் 2023 (12:51 IST)
அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவருடைய மகன் கௌதம சிகாமணி மற்றும் அவரது உறவினர்கள்  மீது அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து அரசுக்கு 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில்  சோதனைக்கு பின்னர்  ஒரு சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்  அமைச்சர் பொன்முடி  இடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் எனவே நவம்பர் 30ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்