கருணாநிதி பேசிய இரண்டு வார்த்தை: உற்சாகத்தின் உச்சியில் தொண்டர்கள்

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (08:12 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக பேச்சுவராமல் இருந்தார். அவரது கம்பீர குரலை மீண்டும் கேட்க திமுக தொண்டர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் கருணாநிதியின் மருத்துவர், கருணாநிதி விரைவில் பேசுவார், அதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தார். எனவே கருணாநிதி விரைவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக பிரமுகர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது ''கருணாநிதியிடம் உங்கள் பெயர் என்ன என்று மருத்துவர் கேட்டதாகவும், அதற்கு அவர் கருணாநிதி என கூறியதாகவும், அதேபோல் உங்களுக்கு  பிடித்தத் தலைவர் யார் என்று மருத்துவர் கேட்டதற்கு, ‘அண்ணா’ என்று கருணாநிதி கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்த தகவல் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. வெகுவிரைவில் கருணாநிதி தனது கம்பீர குரலில் தொண்டர்கள் முன் பேசுவார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்