எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி சிதம்பரம்

Siva
புதன், 10 ஜனவரி 2024 (08:04 IST)
ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கார்த்திக் சிதம்பரம் எம்பி அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் இல்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கார்த்திக் சிதம்பரம் அளித்த பேட்டியில் மோடிக்கு இணையாக ஒரு தலைவராக ராகுல் காந்தியை கருத முடியாது என்று கூறியது காங்கிரஸ் கட்சி மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து சொந்த கட்சியில் உள்ள ஒருவரே ராகுல் காந்தியை குறைத்து மதிப்பிட்டு பேசியது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்த கார்த்திக் சிதம்பரம் எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் இல்லை என்றும் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் தான் நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்