ராகுல் காந்தி கண்ணபிரான் அவதாரம் எடுத்துள்ளார். கே.எஸ்.அழகிரி

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (20:27 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்ணபிரான் அவதாரம் எடுத்துள்ளார் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கண்ணபிரான் போன்று ராகுல் காந்தி புதிய அவதாரம் எடுத்து பாஜக அதிகாரத்துக்கு எதிராக போராடி வருகிறார் என்றும் செப்டம்பர் ஏழாம் தேதி அவர் தமிழகம் வருகிறார் என்றும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள நடைபயணத்தில் அவர் பங்கேற்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பாஜக அரசின் ஜனநாயக அரசியலுக்கு எதிராகவும் அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் விரோத போக்கை எதிர்த்தும், இந்த நடைபயணம் நடைபெற உள்ளது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்