இந்த நிலையில் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஆர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆர்யாவுடன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, , காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களில், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.