அரைகுறை ஆடை அணிந்தால்.. வன்கொடுமை வழக்கு செல்லாது! – நீதிமன்ற பதிலால் சர்ச்சை!

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (12:21 IST)
பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்திருந்தால் வழக்கு செல்லாது என கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பல நடந்து வரும் நிலையில் சில வழக்குகளில் நீதிமன்றங்கள் அளிக்கும் உத்தரவுகள் சர்ச்சைக்கு உள்ளாவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக கேரள நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் தீர்ப்பும் வைரலாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் சிவிக் சந்திரன் என்பவர் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சக பெண் எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின் போது சம்பவத்தன்று பெண் எழுத்தாளர் அணிந்திருந்த ஆடை குறித்த விவாதம் எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள கோழிக்கோடு நீதிமன்றம் “பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிந்திருந்தால் பாலியல் வன்கொடுமை வழக்கு செல்லுபடியாகாது” என கூறியுள்ளது. இந்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்