வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழுவும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பும் இணைந்து கண்டன கூட்டங்களை நடத்தி வருகின்றன.அதில் ஒரு கூட்டத்தில், திமுக எம்பி கனிமொழி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி எம்.பி. கூறியதாவது: "வக்பு திருத்தம் மூலம் முஸ்லிம்களுக்கு மத்திய அரசு அநியாயம் செய்கிறது. நாட்டில் மக்கள் பாதுகாப்பும் இல்லாத நிலையில், பஹல்காமில் சுற்றுலா சென்றவர்களை காப்பாற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
மத்திய அரசின் கவனம் அம்பானி, அதானி இருவர் மீது தான். மக்களுக்கான சட்டங்கள் இல்லாமல், அவர்களின் வர்த்தக வளர்ச்சிக்கே விதிமுறைகள் உருவாகின்றன.
மும்பையில் அமைந்துள்ள முகேஷ் அம்பானியின் வீடு வக்பு வாரிய நிலத்தில் கட்டப்பட்டதாக வழக்கு நடந்து வருகிறது. புதிய வக்பு திருத்த சட்டம் அந்த வீட்டை பாதுகாக்கத்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் உரிமை கெடுக்கப்படுகிறது," என்றார்.