மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, உடனடியாக இது அமலுக்கு வந்தது என்பது தெரிந்தது.
இந்த சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.