பொள்ளாச்சி அவல சம்பவம்: களத்தில் குதித்த கனிமொழி

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (10:49 IST)
பொள்ளச்சியில் இளம்பெண்களுக்கு நேர்ந்த அவலங்களுக்கு எதிராக திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட அயோக்கியன் திருநாவுக்கரசு என்பவன் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டான்.
 
அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப்பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இச்சம்பவம் தமிழக மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
 
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இன்று பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இப்போரட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்