இளம்பெண்கள் பாலியல் வீடியோ - 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய நடவடிக்கை

திங்கள், 11 மார்ச் 2019 (20:54 IST)
பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக தெரியவந்தது. இந்நிலையில் குற்றவாளிகளான நாகராஜன், சபரிஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகிய கைதான நால்வர் கைது செய்யப்பட்டனர். தற்போது குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில்  நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப்பதாகவும் கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் திருநாவுகரசுடன் தற்போது சபரிஷ் இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதெல்லாவற்றிற்கும் மேலாக பார் நாகராஜர் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. தற்போது நான்குபேரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த நாகராஜை அக்கட்சியிலிருந்து தலைமை நீக்கி உத்தவிட்டுள்ளது.
 
இதில் தன்னோடு சேர்த்து நான்கு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசாரிடம் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். 1000 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தற்போது போலீஸார் வசம் உள்ளதாகவும் தெரிகிறது.
 
போலீஸாரின் கைககளுக்குச் சென்றுள்ள வீடியோவை பிரபல தனியார் செய்தி சேனலின்
இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் அரைநிர்வாணத்துடன் இருக்கும் பெண்ணை வீடியோ எடுத்து அந்த பெண்ணை தன் நண்பர்களான திருநாவுக்கரசர் மற்றும் இன்னும் சிலரின் காம இச்சைக்குப் பலியாக்கியுள்ளார் சபரிஷ். இந்த வீடியோவில் எவ்வளவோ தூரம் கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 
இதேபோல இன்னொரு வீடியோவில் அண்ணா விட்ருங்கண்ணா என கதறி அழுத போதிலும் விடாமால் கொடுமை செய்துள்ளான் சபரிஷ்.
பணம் வசதி உள்ளதால் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று தோழிகளாகப் பழகிய பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள் சபரிஷ், திருநாவுக்கரசு, பார் நாகராஜன் கும்பல். இவர்களிடம் விசாரித்தால் இன்னும் பல தகவல் வெளியாகும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 
பொள்ளாச்சியில் பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்புணர்வு செய்த கொடூரர்கள் எல்லோரையும் கைது செய்ய வலியுறுத்தி மாதர்சங்கம் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று நால்வர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பாண்டியராஜன் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர்  கூறியதாவது:
சமூக ஆர்வலர்கள் உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தப்படுவதால் அனுமதி வழங்கப்படுவதில்லை. கடந்த 2 ஆண்டுகளில் தற்கொலை பெண்களின் விவரம் சேகரித்து விசாரிக்கப்படும். மானமங்கப்படுத்தும் மன உளைச்சலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் கீழ் மட்டுமே தற்போது குற்றவாளிகள் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள்  தாமாக முன்வந்து புகார் அளித்தால் வழக்குப் பதிவு செய்யப்படும். இதில் இரண்டு பெண்கள் அடையாளம் காணப்படுள்ளனர். அவர்களிடன் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். இவ்வழக்கில் தேவைப்பட்டால் பெண் அதிகாரி நியமிக்கப்படுவார். 
 
பொள்ளாச்சி நாகராஜ் ஜாமீனை எதிர்த்து தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும். இதில் புகாரளித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாக நாகராஜ், செந்தில்,வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்