விபத்தில் காயமடைந்த மாணவரை தங்கள் காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய கனிமொழி எம்.பி.,

Sinoj
சனி, 10 பிப்ரவரி 2024 (19:58 IST)
கோவை மாவட்டம் கணியூர் சுங்கச் சாவடியில்  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாணவர் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.அவரை திமுக எம்.பி., கனிமொழி தனது காரில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி தலைமையிலான  திமுக  நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கோவை மாவட்டம் கணியூர் சுங்கச் சாவடியில்  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாணவர் விபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த சம்பவத்தைப் பார்த்த எம்.பி., கனிமொழி உள்ளிட்ட குழுவினர் காரில் இருந்து கீழே இறங்கி மாணவரைக் காப்பாற்றி, தங்களது காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மாணவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்