பணிப்பெண் சித்திரவதை செய்த வழக்கு..! திமுக எம்எல்ஏ மகன் மருமகளின் நீதிமன்ற காவல் நீடிப்பு..!

Senthil Velan

வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (17:41 IST)
பணிப்பெண் சித்திரவதை செய்த வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.
 
இருவரும் பிப்ரவரி 9 தேதியான இன்று வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே இருவரும்  ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ALSO READ: அயோத்தியில் அமிதாப் பச்சன் சாமி தரிசனம்.! சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்..!
 
இந்நிலையில் இருவரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதை அடுத்து இருவரும் புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்