அரசியலுக்கு இடைஞ்சல் வந்தா சினிமாவில் ரிட்டையர்டு! – கமல்ஹாசன் பதில்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (15:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் தேவைப்பட்டால் அரசியலுக்காக சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடும் நிலையில் கமல் வெற்றி பெற்றாலும் நடிக்க போய் விடுவார் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இதுகுறித்து பதிலளித்துள்ள கமல்ஹாசன் “முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கூட சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே பல படங்களில் நடித்துள்ளார். நான் நடிப்பினால் சேர்ந்த பணத்தை செலவழித்து நடிப்பதால் யாருக்கு என்ன பிரச்சினை? ஒருவேளை நடிப்பு தொழிலால் அரசியல் சேவைக்கு இடையூறு வந்தால் நடிப்பில் ஓய்வு பெறவும் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்