அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (11:09 IST)
மக்கள் விரும்பினால் தான் அரசியலுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


 

 
சமீபகாலமாக, தமிழக அரசுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். எனவே, அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதுபற்றி ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதுபற்றி அறிவிப்பேன் என கமல்ஹாசனும் கூறிவந்தார்.
 
இந்நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்  “நான் சினிமாவில் நடிக்கிறேன். சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம். அஹிம்சையின் உச்சகட்டமே போராட்டம். மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வருவேன். வந்த பின் ரஜினியிடம் பேசி, அவர் விரும்பினால் அவரை என்னோடு இணைத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என் வாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவதாக கூறவில்லை. மாற்றம் வேண்டும் என்பதே என் நோக்கம்” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்