1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது: கமல் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்..!

Mahendran
சனி, 30 மார்ச் 2024 (17:43 IST)
1 ரூபாயில் 29 காசு தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது என கமல் பிரச்சாரத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். அதுகுறித்து தற்போது பார்ப்போம்.
 
கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியபோது, ‘நாம் வரியாகச் செலுத்தும் 1 ரூபாயில் வெறும் 29 பைசாவை மட்டுமே தமிழகத்திற்குத் திருப்பித் தருகிறது மத்திய அரசு. பாஜக ஆளும் மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்தப் பணத்தைக் கொண்டு வட மாநிலங்களை முன்னேற்றி இருந்தால் கூட, ‘சரி நம் இந்தியச் சகோதரர்களுக்குத்தானே நமது பணம் போய்ச் சேருகிறது’ என சமாதானப் பட்டுக்கொள்ளலாம். அதைச் செய்யும் திறமையும் இல்லை என்று கூறியிருந்தார்.
 
இதற்கு நெட்டிசன்கள் பதிலடியாக, ‘ஒரு பொருள் வாங்கும் போது 100 ரூபாய் GST கட்டுகிறோம் என்று எடுத்துக் கொண்டால் அதில் 50% அதாவது 50 ரூபாய்  மாநில அரசுக்கு SGST மூலம் சென்றுவிடும். மீதம் உள்ள 50 ரூபாய் மத்திய அரசுக்கு செல்லும் நிலையில் அதிலிருந்து தான் மத்திய அரசு 29 ரூபாய் தமிழகத்திற்கு கொடுக்கிறது. 
 
அப்படி என்றால்  மாநில அரசுக்கு 50 + 29 சேர்த்தால் 79 ரூபாய் கிடைக்கும். மீதமுள்ள 21 ரூபாய் தான் மத்திய அரசுக்கு கிடைக்கும்.  இந்த கணக்கு கமலஹாசனுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை, இருப்பினும் திமுக என்ன எழுதிக் கொடுக்கின்றதோ அதை படிக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்