கமல்ஹாசன் முன்கூட்டியே பிரச்சாரம் செய்ய தொடங்கியது இதற்குத்தானா?

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (18:26 IST)
திமுக கூட்டணியில் கமல் கட்சி? உதயநிதியுடன் பேச்சுவார்த்தை என தகவல்!
கழகங்கள் உடன் கூட்டணி இல்லை என பேசி வந்த கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையில் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி நேரில் சந்தித்து பேசியதாகவும், அப்போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கமல்ஹாசன் தரப்பு கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளது 
 
ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் இருப்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று உதயநிதி கூறியதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறுவதற்காகத்தான் ரஜினியுடன் கூட்டணி, ஒவைசி கட்சியுடன் கூட்டணி என கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து வருவதாகவும், தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை திமுகவுக்கு உணர்த்தும் வகையில்தான் அவர் தற்போது பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்