திமுகவா? கமல் கட்சியா? தமிழக கூட்டணி குறித்து ஒவைசி ஆலோசனை!
புதன், 16 டிசம்பர் 2020 (13:56 IST)
சமீபத்தில் நடைபெற்ற பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் ஒவைசி கட்சி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் அவரது கட்சி பிடித்த ஓட்டுகள் காரணமாகத்தான் லாலு பிரசாத் யாதவின் மகன் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்றும் கூறப்பட்டது
அந்த வகையில் பீகாரை அடுத்து தமிழகத்திலும் ஓவைசி கட்சி போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் பீகாரில் ஏற்படுத்திய தாக்கத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சிம் சீமான் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்தால் அந்த கூட்டணியுடன் ஓவைசி கட்சியும் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் திமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
திமுகவில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் அந்த எண்ணிக்கையிலான தொகுதி கிடைத்தால் திமுகவுடன் கூட்டணி என்றும் இல்லையேல் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி என்று ஒவைசி கட்சியினர் தரப்பில் கூறுகின்றனர்
ஒவைசி கட்சி தமிழகத்தில் போட்டியிட்டால் ஒட்டுமொத்த இஸ்லாமிய வாக்குகளும் அக்கட்சிக்கு கிடைக்கும் என்பதால் அக்கட்சியை தங்கள் அணியில் இணைக்க போட்டா போட்டி நடந்து வருவதாக கூறப்படுகிறது