தமிழ்நாட்டில் உலகக்கோப்பை கபடி போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (11:43 IST)
தமிழ்நாட்டில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 
அமைச்சரான பின் முதல் முறையாக சட்டமன்றத்தில் பேசிய அவர் உலகக்கோப்பை கபடி போட்டியை தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் ஜூன் மாதத்திற்கு முடிக்கப்படும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். 
 
மேலும் எட்டு ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 18 கோடி மதிப்பில் கால்பந்து உடற்பயிற்சி கூடம் தடகள ஓடுகளை பாதை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது என்றும் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்