இந்நிலையில் இந்திய அணிக்காக டி 20 உலகக்கோப்பையில் சில போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் அதை குறிப்பிட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் “அணியில் வீரர்கள் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் வீரர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்தது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் தொடரின் இறுதியில் சிறப்பாக விளையாடவில்லை. அணியில் சஹால் இடம்பெற்றிருந்தால், அவர் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை” எனக் கூறியுள்ளார்.