விளையாட்டுத்துறைக்கு உதயநிதியை அமைச்சராக நியமித்து இருப்பது பாராட்டுக்குரியது: செல்லூர் ராஜூ
செவ்வாய், 3 ஜனவரி 2023 (10:13 IST)
தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில் இளைஞர் ஒருவர் விளையாட்டு துறைக்கு அமைச்சராகி இருப்பது பாராட்டுக்குரியது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் நடந்த கபடி போட்டி விழா தொடக்கத்தில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ, கபடி விளையாட்டு மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டு துறைக்கு உதயநிதியை அமைச்சராக நியமித்து இருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் இன்னும் சிறப்பாக இந்த துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருப்பதற்கு வாரிசு அரசியல் என பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரே உதயநிதிக்கு பாராட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.