விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவராக உள்ள ஜூலி, நடிகர் ஸ்ரீ-யிடம் பேசிய உரையாடல் சமூகவலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இந்த நிகழ்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர். செல்போன், தொலைக்காட்சி, செய்திதாள், இணையம் என வெளியுலக தொடர்பின்றி 100 நாட்கள் அவர்கள் ஒரே விட்டிற்குள் தங்கியிருக்க வேண்டும். அவர்களே சமைத்து சாப்பிட வேண்டும். இதில் யாருடன் பிரச்சனை செய்யாமல் 100 நாட்கள் தாக்குபிடிப்பவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசனே வழிநடத்துகிறார். நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாள் முடிந்தவிட்ட நிலையில், நடிகர் ஸ்ரீ சற்று புலம்பிக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில்தான் ஒரு நாள் அந்த வீட்டிற்குள் என்ன நடந்தது என்ற வீடியோவை விஜய் தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது. அதில், ஒநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சோகமாக இருக்க, அவர் அருகில் ஜல்லிட்டிற்கு ஆதரவான போராட்டத்தில் “ சின்னம்மா..சின்னம்மா.. ஓ.பி.எஸ் எங்கம்மா” என ஸ்டைலாக முழக்கமிட்டு பிரபலமான ஜூலி அமர்ந்திருந்தார். ஸ்ரீ-யிடம் ஜூலி “ ஏன் போகனும்னு நினைக்கிற.. இந்த வீட்டுக்குள்ள வரும்போது எல்லோரையும் யாராவது கட்டிப்புடிக்கிறாங்க.. எனக்கு யாருமே இல்லை.. விட்டுப் போகனும்னு நினைக்காதே.. எனக்காக இரு.. என்னைப் பத்தி நினைச்சிப் பாரு” என கூறினார்.
அவர் நட்பு முறையில் கூறியிருந்தாலும், இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜூலியை கிண்டலடித்து பலரும் டிவிட் செய்து வருகின்றனர்.
பொதுவாக இது போன்ற விவகாரத்திற்கு சம்பந்தப்பட்டவர் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிப்பார். ஆனால், 100 நாட்கள் கழித்து வெளியே வந்த பின்புதான் இந்த விவகாரம் ஜூலிக்கே தெரிய வரும் என்பதுதான் சோகம்...