அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பேன் என்று மிரட்டிய நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு அதிரடியாக பதிலளித்துள்ளது. "அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யலாம். ஆனால், இந்தியா மட்டும் ஏன் இறக்குமதி செய்யக்கூடாது?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வரும்போது, இந்தியாவுக்கு மட்டும் தடை விதிப்பது நியாயமற்றது என்று இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. கூடுதல் வரி விதிப்பேன் என்று ட்ரம்ப் கூறியதும் பொருத்தமற்றது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.