ரஜினி-கவர்னர் சந்திப்பின் பின்னணியில் பாஜகவின் அழுத்தமா?

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (16:15 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளதற்கு பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருக்கலாம் என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது ரஜினிகாந்த் அவ்வப்போது தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே வருவார் என்றும் அதனால் அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை நாம் கணிக்க முடியாது என்றும் கூறினார் 
 
சமீபத்தில் டெல்லி சென்று வந்த பின் அவர் திடீரென கவர்னரை சந்தித்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உண்மைதான் என்றாலும் ரஜினியின் சந்திப்புக்கு பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ரஜினியை பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ஆனால் அதே நேரத்தில் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்று யாராலும் யூகிக்க முடியாது என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்