தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!!

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (12:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக ஆளுநரால் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றார் என்பது தெரிந்ததே.
 
அவர் டெல்லிக்கு ஜெயிலர் படப்பிடிப்புக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் அவர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை என்றும் அடுத்த வாரம்தான் ஜெயிலர் படப்பிடிப்பு ஆந்திராவில் தொடங்க உள்ளது என்றும் எனவே டெல்லிக்கு அவர் வேறு ஒரு பணிக்காக சென்று இருந்தார் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது
 
 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் டெல்லி பயணம் அதன்பின் ஆளுநர் சந்திப்பு என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்