முதல் மரியாதை படம் பார்க்கும் ஜெயலலிதா: வீடியோவில் இதை கவனித்தீர்களா!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (16:28 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஜெயலலிதா முதல் மரியாதை படம் பார்த்துக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக பல வதந்திகள் வரும் வேளையில் ஆர்கே நகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா தொடர்பான இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வீடியோ அரசியல் ஆதாயத்துக்காகத்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என பலரும் கூறிவருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்த வீடியோவை ஆராய்ந்ததில் அந்த வீடியோவில் பழச்சாறு அருந்தும் ஜெயலலிதா டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பது தெரிகிறது.
 
பின்னணியில் சிவாஜி கணேசன், ராதா நடித்த முதல் மரியாதை படத்தின் இசை ஒலிக்கிறது. நீ தானா அந்த குயில் என்ற பாடலின் இசை அது. அதனைத்தான் ஜெயலலிதா பழச்சாறு அருந்தியவாறு பார்க்கிறார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்