’ஜெயலலிதா பட்ட கஷ்டங்களை நானும் அனுபவித்தேன்’: நடிகை ரோஜா

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (15:56 IST)
நானும் ஜெயலலிதாவைப் போலவே சட்டமன்றத்தில் இருந்து ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டேன் என்று நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரோஜா புகழாரம் சூட்டினார்.


 

ஹைதராபாத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா.

சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது வேறு பெண்ணாக இருந்தால் அரசியலே வேண்டாம் என சென்றிருப்பார். ஆனால் ஜெயலலிதாவோ அதை எல்லாம் பொருட்படுத்தாமல் போராடி முதல்வர் ஆனார்.

நானும் ஜெயலலிதாவைப் போலவே சட்டமன்றத்தில் இருந்து ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டேன். என்னை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்ததும் என் மகள் என்னிடம் வந்து அரசியல் வேண்டாம் அம்மா விட்டுவிடு. நீ ஏன் அவமானப்பட வேண்டும் என்று கேட்டாள்.

’ஜெயலலிதா பட்ட கஷ்டங்களுக்கு முன்பு என் கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர் தனி ஆளாக போராடி வென்றார். அதனால் என் கஷ்டம் பெரிதாக தெரியவில்லை’ என்று நான் என் மகளிடம் கூறினேன். ஜெயலலிதாவின் வாழ்க்கை அனைத்து பெண்களுக்கும் வழிகாட்டி, உந்து சக்தி” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்