இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (15:54 IST)
கடந்த 2016ஆம் ஆண்டில் சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை வழக்கப்பட்டுள்ளது.


 

 
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
பெண்கள் முகத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டாலே குற்றம் என்ற நாட்டில், குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையானவை. 2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் மரண தண்டனை எண்ணிக்கை குறைந்துள்ளது.
 
இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது. மரண தண்டனை அதிக அளவில் வழங்கப்படும் நாடுகளில் பிரபலமானவை அரேபியா நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்