அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை செல்வது நிச்சயம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் பாஜக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து, பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகத்தல், இதுவரை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுகவினர் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர். அதே போல அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சிறை செல்வது நிச்சயம்.
2ஆனால், கடந்த 2 வருட பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி மீது அல்லது மத்திய அமை்சர்கள் மீது யாரும் ஊழல் குற்றம் சாட்ட முடியாது என்றார்.