தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், வதந்திகளும் பரவி வருகிறது. இன்று வரை அவரது மரணம் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னை மாவட்ட தீபா பேரவை ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய அப்போலோ மருத்துவமனை டாக்டர் ராமசீதா பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே நாடித்துடிப்பு இன்றி இறந்த நிலையில் தான் கொண்டு வந்தார்கள். அவரது உடலை பதப்படுத்ததான் வெளிநாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முதல் மாடியிலேயே அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். எங்களுக்கு கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தது. இதனால் பலர் ராஜினாமா செய்தனர். உடலில் துளையிட்டது பதப்படுத்த தான். உடலில் இருந்த ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விட்டு திரவம் செலுத்தி பதப்படுத்தப்பட்டது.
எம்ஜிஆர் சமாதி அருகே உடலை அடக்கம் செய்ய இடத்தை ஆய்வு செய்யும் பணி ஜெயலலிதாவின் உடலை மருத்துவமனையில் அனுமதித்த 20 நாட்களிலேயே தொடங்கினர். இந்த உண்மைகளை விசாரணை கமிஷன் முன்பு கூறவும் தயார் என அவர் கூறியுள்ளார்.