ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள் தான் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர்: ஜெயகுமார்

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (18:17 IST)
திமுகவில் ஜோக்கர்கள் மற்றும் அடாவடி செய்பவர்கள் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றும் பொதுமக்களை அடிப்பவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை அசிங்கப்படுத்துபவர்கள் தான் திமுகவில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
இதுவரை தமிழ்நாட்டில் கல் தூக்கி அடித்த ஒரு அமைச்சரை பார்த்ததில்லை என்றும் தமிழ்நாடு வெட்கி தலைகுனியும் ஜோக்கர் அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் புரட்சி செய்வார்கள் என்றும் மக்களின் புரட்சிக்கு முன் எதுவும் எடுபடாது என்றும் எத்தனை பேர் வந்தாலும் அதிமுக ஜெயிப்பது உறுதி என்றும் திமுகவின் பீ டீம் தான் கமல்ஹாசன் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்